வினோத பழக்கங்கள்

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009 · 0 கருத்துகள்

பிரபலமான சிலருக்கு வினோத பழக்கங்கள் இருப்பதைக் கேள்விப்பட்டிருக்கின்றோம்.இதோ சில பிரபல வினோதங்கள்.


பிரபல விஞ்ஞானி ஜன்ஸ்டீன் குளிக்கும் போது குளியல் அறைக் கதவை தாழ் இடாமல்தான் குளிப்பார்.

துப்பறியும் தந்தை எனப் புகழப்படுபவர் எட்கார் ஆலன்போ.இவரது செல்லப்பறவை இவரது தோளின் மேல் அமர்ந்தபடி இருந்தால் தான் கதை எழுதும் ஆர்வம் அவருக்கு ஏற்படுமாம்.

நாத்தானியல் ஹாதார்ன் என்ற அமெரிக்க எழுத்தாளர் தன் மனைவியிடம் இருந்து கடிதம் வந்தால் முதலில் கையை நன்கு சுத்தமாக கழுவி விட்டுத்தான் கடிதத்தை பிரிப்பாராம் .

வில்லியம் மேக்விஸ் தாக்கரே எனும் எழுத்தாளர் ' வானிட்டி பேர் ' நாவல் மூலம் அகில உலகப் புகழ் பெற்றார்.இந்த நாவலை எந்த வீட்டிலிருந்து எழுதினாரோ அந்தவீ ட்டைக் கடக்கும் போதெல்லாம் தன் தொப்பியை எடுத்துவிட்டு அந்த வீட்டுக்கு தலை வணங்குவார்.

முதன் முதலில் ஆங்கில அகராதியைத் தயாரித்த டாக்டர் சாமுவேல் ஜோன்சானுக்கு பார்வையாளர்கள் தொல்லைப் படுத்துவார்கள் என்ற பயம் எப்போதும் உண்டு.அதனால் அவர் எழுதும்போது மரத்தின் மேல் உட்கார்ந்து கொள்வாராம்.

நெப்போலியனை வெண்று உலகப் புகழ் பெற்ற வேசிண்டன் பிரபு நேரம் தவறாமையை கடைப்பிடிப்பதில் தீவிரமானவர்.அதனால் எப்போதும் தனது சட்டைப் பையில் ஆறு கடிகாரங்களை வைத்திருப்பாராம்.

திரை உலகிற்கு பதிவுலகம் வழங்கும் விருது

திங்கள், 17 ஆகஸ்ட், 2009 · 0 கருத்துகள்

பதிவுலக நண்பர்களே உங்கள் அபிமான நட்சத்திரங்களுக்கு வாக்களிக்க மறக்காதீர்கள்

வடிவேலுவுக்கு வெடிவைக்கும் படம்

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009 · 1 கருத்துகள்

[ Saturday, 15 August 2009, 02:55.33 PM GMT +05:30 ]
ஹீரோ அளவுக்கு வடிவேலுவின் ஓபனிங் சீனுக்கும் பில்டப் கொடுக்கும் அளவுக்கு அவரது காமெடி பிரசித்தம் பெற்றுவிட்டது. 'கச்சேரி ஆரம்பம்' படத்தில் வடிவேலு வரும் ஒவ்வொரு காட்சிகளிலும் வெடி வெடிப்பதுபோல உருவாக்கியுள்ளார்.
இதுபற்றி படத்தின் இயக்குனர் திரைவண்ணன் கூறியதாவது :-

"ரொம்பநாள் கழிச்சு ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் பாரி என்ற கதாபாத்திரத்தில் ஜீவா நடிக்கிறார். பெயருக்கு ஏற்ப தன்னிடம் உள்ளதை யார் கேட்டாலும் கொடுத்துவிடுவார். அதை சாதகமாக்கிக் கொள்ள திட்டமிடும் வில்லன் சக்ரவர்த்தி, அவரது காதலி பூனம் பஜ்வாவை கேட்பார். காதலியை ஹீரோ விட்டுத்தருகிறாரா என்பதே கதை. 75 சதவீதம் படம் முடிந்திருக்கிறது. சென்னையில் கோத்தாரி மில்லில் க்ளைமாக்ஸ் காட்சி படமாகிறது. வில்லனுடன் வசனம் பேசியபடியே ஜீவா மோதும் வித்தியாசமான சண்டை காட்சி அமைக்கிறார் அறிமுக ஸ்டண்ட் இயக்குனர் 'பில்லா' ஜெகன். விரைவில் ஜெய்ப்பூரில் பாடல் காட்சி படமாகிறது.

தீபாவளி என்னும் கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்துள்ளார். தீபாவளி அன்று பிறந்ததால் தனது பெயரை தீபாவளி என்று வைத்துக்கொள்கிறார் வடிவேலு. தான் வரும் ஒவ்வொரு காட்சியிலும் பில்டப்பிற்காக வெடி வெடித்த பிறகுதான் வருவார். இதற்காக பண்டல் பண்டலாக பட்டாசு வாங்குகிறோம். தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

வடிவேலுவின் திடீர் மாற்றம்!

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009 · 0 கருத்துகள்


[ Friday, 14 August 2009, 05:05.21 PM GMT +05:30 ]
டிராக் காமெடிக்கெல்லாம் நோ சொல்லிவிட்டார் வடிவேலு. இனி அவர் நடிக்கும் படங்களில் ஹீரோவுடனும் கதையுடனும் பயணிப்பாராம்.
ஏன் இந்த மாற்றம்? அவருடன் இருந்த குட்டி குட்டி டிராக் நடிகர்கள் எல்லாம், தங்களுக்கென்று தனி டிராக் போட்டுக் கொண்டு போய்விட்டார்கள். இவர்களில் சில பேர் எழுதிக் கொடுத்த டிராக்கைதான் வடிவேலு பயன்படுத்தி வந்தார். இவர்கள் போனதும், தனக்கென்று தனியாக டிராக் காமெடி எழுதுபவர்களை நியமித்திருந்தார் வைகைப்புயல். “அவங்களும் வாழ்க்கையிலே முன்னேறட்டும். போய் தனியா கடை போட்டிருக்காங்க. நல்லதுதானே” என்று தனக்கு தானே ஆறுதல் சொல்லிக் கொண்டாலும், இவர் நியமித்த புதியவர்களின் சரக்கு அவ்வளவு திருப்தியாக இல்லையாம். அதனால்தான் இந்த அதிரடி மாற்றம்.

முன்பெல்லாம் வடிவேலுவை அப்ரோச் செய்கிற இயக்குனர்களிடம், “சாரு. என்னை தனியா விட்ருங்க. நானே டிராக் பண்ணி கொடுத்திடுறேன்” என்று கூறிவிடுவார். இல்லை சார்... கதையோட ஒட்டி வரணும் என்றால், “ஸாரி வேற ஆளை பாருங்க” என்று கூறிவிடுவார். (பெரிய நடிகர்களின் படங்களுக்கு மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு) இதனாலேயே பலர் விவேக் பக்கம் ஒட்டி வந்தார்கள். இந்த நிலையில் வைகைப் புயலின் இந்த முடிவு பலருக்கும் சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது.

டிராக் விஷயத்தில் காம்ப்ரமைஸ் ஆனாலும், சம்பள விஷயத்தில் இந்த புயல் சூறாவளியாகிவிட்டார். பத்து விரலையும் நீட்டுகிறாராம். இது ஒருநாள் கணக்குதான் என்கிறார்கள் அதிர்ச்சியோடு!

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் விட்டமின்-சி!

வியாழன், 13 ஆகஸ்ட், 2009 · 0 கருத்துகள்

lankasri.comவிட்டமின்-சி அடங்கிய உணவுகளைப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்வதால்,இதயநோய் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம் என்று தெரிய வந்துள்ளது.

சி ரியாக்டிவ் புரோட்டீன்-சிஆர்பி ஏற்படுவதாலேயே இதய நோயும்,சர்க்கரை நோயும் எளிதில் தாக்கக்கூடும் என்றும்,சிஆர்பி பாதிப்பை வைட்டமின்-சி சத்து கட்டுப்படுத்துவதால்,அந்நோய்கள் பாதிப்பில் இருந்து தப்பலாம் என்றும் கலிபோர்னியாவில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

மேலும் வைட்டமின்-ஈ கொண்ட உணவுப் பொருட்களை அன்றாடம் எடுத்துக் கொள்வதால் உடலுக்கு பெரிய அளவில் பலன் ஏதும் இல்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

என்றாலும் விட்டமின்-சி மற்றும் ஈ சத்துள்ள உணவை சாப்பிடுவதால்,மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தைக் கட்டுப்படுத்தும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.

இந்த ஆராய்ச்சியானது 2மாதம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாகவும்,நீண்டகால சோதனையில என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை தெரிவிக்க இயலாது என்றும் ஆய்வு முடிவு அறிக்கை கூறுகிறது.

ரஜினி துவக்கிவைத்த இணையதளம்

· 0 கருத்துகள்


[ Thursday, 13 August 2009, 03:36.08 PM GMT +05:30 ]
ஃபோர் பிரேம்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை இயக்குநர் ப்ரியதர்ஷனும் அவரது மனைவி லிசி ப்ரியதர்ஷனும் இணைந்து தமது நிர்வாகத்தின் கீழ் நடத்தி வருகின்றனர்.
இந்த நிறுவனம் சமீபத்தில் வெளியான, ‘பொய் சொல்லப் போறோம்’, ‘காஞ்சிவரம்’ ஆகிய படங்களைத் தயாரித்துள்ளது.
இதில் காஞ்சிவரம் படத்திற்கு விருது கிடைத்துள்ளது. படத் தயாரிப்பில் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வரும் ஃபோர் பிரேம்ஸ் நிறுவனத்திற்கு ஃபோர் பிரேம்ஸ் என்ற பெயரில் ப்ரிவியூ தியட்டரும் உள்ளது. அது மட்டுமின்றி சினிமா தயாரிப்புக்குத் தேவையான பல்வேறு துறைகளை தன்னுள்ளே கொண்டுள்ள இந்நிறுவனம் இப்போது தனது இணைய தளத்தை துவங்கியுள்ளது.
இந்த இணையதளத்தை நடிகர் ரஜினிகாந்த் துவக்கி வைத்தார். இந்த இணையதளத்தில் ஃபோர் பிரேம்ஸ் ப்ரிவியூ தியேட்டர், டப்பிங், எடிட்டிங், கேமரா சம்பந்தமான அனைத்து

நமீதாவின் கடின உழைப்பு வெற்றி பெறும் - சரத்குமார்

· 0 கருத்துகள்

[ Tuesday, 11 August 2009, 03:17.06 PM GMT +05:30 ]
ஜெகன்மோகினி திரைப்படும் அந்தக் காலத்தில் பெரும் வெற்றி பெற ஜெயமாலினியின் கடும் உழைப்பும், அபார நடிப்பும் உதவியாக இருந்தது.
அதேபோல இன்று ரீமேக் செய்யப்பட்டுள்ள ஜெகன்மோகினி படமும் நமீதாவின் கடின உழைப்பால் பெரும் வெற்றி பெறும் என்று பாராட்டியுள்ளார் நடிகர் சரத்குமார்.

நமீதா, நிலா நடிப்பில் ஜெகன்மோகினி ரீமேக் ஆகியுள்ளது. ஜெயமாலினி கேரக்டரில் நமீதா நடித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று நடந்தது.

தயாரிப்பாளர் சுரேஷ் ஆடியோவை வெளியிட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பெற்றுக் கொண்டார். நடிகர்கள் சரத்குமார், ராஜா, நடிகைகள் நமீதா, நிலா, தயாரிப்பாளர்கள் முரளி, அபிராமி ராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் நமீதா பேசுகையில், படத்தின் கதையை இயக்குநர் விஸ்வநாதன் என்னிடம் சொன்னபோது, இது வெற்றி பெறுமா என்பதில் சந்தேகம் இருந்தது. ஆனால் நடிக்க ஆரம்பித்த பின்னர் அந்த சந்தேகம் போய் விட்டது என்றார்.

சரத்குமார் பேசுகையில், ஒரிஜினல் ஜெகன்மோகினி, ஜெயமாலினியின் சிறப்பான நடிப்பால் வெற்றி பெற்றது. அதேபோல, இந்த ஜெகன்மோகினியும், நமீதாவின் கடின உழைப்பால் பெரும் வெற்றி பெறும் என்றார்.

அபிராமி ராமநாதன் பேசுகையில், படத்தின் சில காட்சிகளை பார்த்து நான் பிரமித்துப் போய் விட்டேன். ஹாரி பாட்டர், ஹாலிவுட் படங்களின் தரத்தில் அவை உள்ளன. தமிழ் சினிமாவின் தரத்தை இந்தப் படம் மேலும் உயர்த்தும் என்றார்.

காலை எரித்த நமீதா

· 0 கருத்துகள்

[ Wednesday, 12 August 2009, 06:53.11 AM GMT +05:30 ]
நமீதா நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ‘ஜெகன்மோகினி’. இந்தப் படம் விட்டாலாச்சாரியாவின் படமான ‘ஜகன்மோகினி’யைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் நமீதா, நிலா, வடிவேலு போன்றோரும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் நமீதா தன்னுடைய காலை அடுப்பில் வைத்து எரிப்பது போன்ற ஒரு காட்சி இடம் பெற்றுள்ளதாம். இதை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உதவியுடன் கலக்கலாக கொண்டுவந்திருக்கிறார்களாம்.
இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டுவிழாவில் பேசிய நடிகர் சரத்குமார் ‘குஷ்புவுக்குக் கோவில் கட்டியது போன்று நமீதாவுக்கும் கோவில் கட்ட ரசிகர்கள் அனைவரும் தயாராக இருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் வருகின்ற நமீதா காலை எரிப்பது போன்ற காட்சியை பார்த்து நமீதாவின் ரசிகர்கள் யாரும் உணர்ச்சிவசப்பட்டுவிடக்கூடாது...’ என்றார்.

விஜய் 50... ராஜ்குமார் இயக்குகிறார்!

சனி, 8 ஆகஸ்ட், 2009 · 0 கருத்துகள்


Vijay
ஒருவழியாக விஜய்யின் 50 வது படத்தை இயக்கும் இயக்குநர் யார் என்பது மியூசிக்கல் சேர் போட்டியில் எஸ்பி ராஜ்குமார் வெற்றி பெற்றுள்ளார்.
இந்தப் படத்தை இயக்கப் போகிறவர் என்று ஜெயம் ராஜா தொடங்கி, பேரரசு வரை பலரது பெயர்கள் அடிபட்டன. ஆனால் கடைசியில் அந்த வாய்ப்பு எஸ்பி ராஜ்குமாருக்குக் கிடைத்துள்ளது.
ஆர்கே நடிக்கும் அழகர் மலை படத்தை இப்போது முடித்துக் கொடுத்துவிட்ட ராஜ்குமார், சொன்ன கதை தயாரிப்பாளர் சங்கிலி முருகனுக்குப் பிடித்துவிட, அவர்தான் விஜய்க்கு ரெகமண்ட் செய்தாராம்.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இளையராஜாவிடம் இசையமைத்துத் தர கேட்டுள்ளாராம் சங்கிலிமுருகன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதனால் யுவன் ஷங்கராவது இசையமைக்க வேண்டும் என சங்கிலி முருகன் கோரிக்கை விடுத்துள்ளாராம்.

அறிமுகம் 256 ஜி.பி பென் டிரைவ்

· 0 கருத்துகள்

கிங்க்ஸ்டன் நிறுவனம் 256 ஜி.பி பென் டிரைவை அறிமுகம் செய்துள்ளது.இதில் நீங்கள் கடவுசொல்லினைக்(password) கொண்டு உங்கள் கோப்புகளை(files) பாதுகாத்தும் கொள்ளலாம்.நீங்கள் கோப்புகளை பரிமாறிகொள்ளும் நேரமும்(Data Transfer Time) இதில் மிகக் குறைவே.இதற்கு 5 வருட வாரன்டியும் உண்டு.இது இந்தியாவுக்கு இன்னும் வரவில்லை.அதனால் இதன் விலை என்னவென்று பொறுத்திருந்து பார்க்கலாம்.மற்ற நாடுகளில் இதன் விலை $ 1100.



Technical Specifications


Capacity — 256GB
Fast — data transfer rates of up to 20MB/sec. read and 10 MB/sec. write
Dimensions — 2.78″ x 0.88″ x 0.65″ (70.68mm x 22.37 mm x 16.45mm)
  • Operating Temperature — 32° to 140° F (0° to 60° C)
  • Storage Temperature — -4° to 185° F (-20° to 85° C)
  • Simple — just plug into a USB port
  • Practical — durable, capless design
  • Guaranteed — five-year warranty
  • Safeguarded — includes Password Traveler security software for Windows

Archives