வியாழன், 6 ஆகஸ்ட், 2009 ·

எந்திரனுக்கு பிறகு ரஜினிகா‌ந்‌த் அரசியல் பிரவேசம்: ச‌த்யநாராய ரா‌வ்
[ Tuesday, 04 August 2009, 04:02.56 AM GMT +05:30 ]
''ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து 'எந்திரன்' படத்துக்குப் பிறகு முடிவெடுக்கப்படும்'' என அவரது சகோதர‌ர் சத்யநாராயண ராவ் கூ‌றினா‌ர்.
திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூரில் உள்ள பாப்பாத்தியம்மன் கோயிலில் நடைபெற்ற ஆடிப் பெருக்கு விழாவில் அன்னதானம் வழங்க வந்த அவர் கூறுகை‌யி‌ல், எங்கேயோ பிறந்து, தமிழகம் வந்து அனைவரின் மனதிலும் ரஜினி நீங்காத இடம் பிடித்துவிட்டார்.

மக்கள் விரும்பினால் அவர் அரசியலுக்கு வருவார். இது குறித்து 'எந்திரன்' படம் வெளிவந்த பிறகு விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும்.

தற்போது கிருஷ்ணகிரி அருகே நாச்சியார்குப்பத்தில் எங்கள் தாய், தந்தை நினைவாக திருமண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. 'எந்திரன்' படம் வெளிவந்த பிறகு மணி மண்டபம் கட்ட இருக்கிறோம் என்று ச‌த்யநாராயணரா‌வ் கூ‌றினா‌ர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Archives