விஜய் 50... ராஜ்குமார் இயக்குகிறார்!

சனி, 8 ஆகஸ்ட், 2009 ·


Vijay
ஒருவழியாக விஜய்யின் 50 வது படத்தை இயக்கும் இயக்குநர் யார் என்பது மியூசிக்கல் சேர் போட்டியில் எஸ்பி ராஜ்குமார் வெற்றி பெற்றுள்ளார்.
இந்தப் படத்தை இயக்கப் போகிறவர் என்று ஜெயம் ராஜா தொடங்கி, பேரரசு வரை பலரது பெயர்கள் அடிபட்டன. ஆனால் கடைசியில் அந்த வாய்ப்பு எஸ்பி ராஜ்குமாருக்குக் கிடைத்துள்ளது.
ஆர்கே நடிக்கும் அழகர் மலை படத்தை இப்போது முடித்துக் கொடுத்துவிட்ட ராஜ்குமார், சொன்ன கதை தயாரிப்பாளர் சங்கிலி முருகனுக்குப் பிடித்துவிட, அவர்தான் விஜய்க்கு ரெகமண்ட் செய்தாராம்.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இளையராஜாவிடம் இசையமைத்துத் தர கேட்டுள்ளாராம் சங்கிலிமுருகன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதனால் யுவன் ஷங்கராவது இசையமைக்க வேண்டும் என சங்கிலி முருகன் கோரிக்கை விடுத்துள்ளாராம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Archives