காலை எரித்த நமீதா

வியாழன், 13 ஆகஸ்ட், 2009 ·

[ Wednesday, 12 August 2009, 06:53.11 AM GMT +05:30 ]
நமீதா நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ‘ஜெகன்மோகினி’. இந்தப் படம் விட்டாலாச்சாரியாவின் படமான ‘ஜகன்மோகினி’யைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் நமீதா, நிலா, வடிவேலு போன்றோரும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் நமீதா தன்னுடைய காலை அடுப்பில் வைத்து எரிப்பது போன்ற ஒரு காட்சி இடம் பெற்றுள்ளதாம். இதை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உதவியுடன் கலக்கலாக கொண்டுவந்திருக்கிறார்களாம்.
இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டுவிழாவில் பேசிய நடிகர் சரத்குமார் ‘குஷ்புவுக்குக் கோவில் கட்டியது போன்று நமீதாவுக்கும் கோவில் கட்ட ரசிகர்கள் அனைவரும் தயாராக இருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் வருகின்ற நமீதா காலை எரிப்பது போன்ற காட்சியை பார்த்து நமீதாவின் ரசிகர்கள் யாரும் உணர்ச்சிவசப்பட்டுவிடக்கூடாது...’ என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Archives