வியாழன், 6 ஆகஸ்ட், 2009 ·

ரோபோ தொழில்நுட்பத்தில் இருதய அறுவை சிகிச்சை
lankasri.comரோபோ உதவியுடன் இரண்டு பேருக்கு இருதய அறுவை சிகிச்சையை சென்னை மருத்துவர்கள் வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். இருதய அறுவை சிகிச்சையில் இது ஒரு முக்கியமான திருப்பம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரோபோ உதவியுடன் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையினால் நோயாளிகளுக்கு சில வசதிகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இம்முறையை பயன்படுத்துவதால் நோயாளிக்கு வலி குறையும் என்றும், அறுவை சிகிச்சையின் போது விரையமாகும் இரத்தத்தின் அளவும் கட்டுபபடுத்தப்படுவதால் இது நோயாளிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

இந்த அறுவை சிகிச்சை முறையில் சென்னையில் உள்ள செட்டிநாடு ஹெல்த் சிட்டி மருத்துவமனை மருத்துவர்கள் இரண்டு இளைஞர்களுக்கு இருதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். இந்த அறுவை சிகிச்சையின் போது குறைந்த அளவு திசுக்களே சேதமடைவதால் குறைந்த அளவே இரத்த விரையம் ஏற்படுகிறது. இதனால் நோயாளிக்கு குறைந்த அளவே இரத்தம் செலுத்தினால் போதுமானது.

இந்த சிகிச்சை முறையினால் குறைந்த அளவு பகுதிகள்தான் பாதிக்கப்படுகின்றன. அதனால் அறுவை சிகிச்சையின் போது போடப்படும் தையல் உறுதியாகவும் இருக்கும் என்று இம் மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Archives