வடிவேலுவின் திடீர் மாற்றம்!

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009 ·


[ Friday, 14 August 2009, 05:05.21 PM GMT +05:30 ]
டிராக் காமெடிக்கெல்லாம் நோ சொல்லிவிட்டார் வடிவேலு. இனி அவர் நடிக்கும் படங்களில் ஹீரோவுடனும் கதையுடனும் பயணிப்பாராம்.
ஏன் இந்த மாற்றம்? அவருடன் இருந்த குட்டி குட்டி டிராக் நடிகர்கள் எல்லாம், தங்களுக்கென்று தனி டிராக் போட்டுக் கொண்டு போய்விட்டார்கள். இவர்களில் சில பேர் எழுதிக் கொடுத்த டிராக்கைதான் வடிவேலு பயன்படுத்தி வந்தார். இவர்கள் போனதும், தனக்கென்று தனியாக டிராக் காமெடி எழுதுபவர்களை நியமித்திருந்தார் வைகைப்புயல். “அவங்களும் வாழ்க்கையிலே முன்னேறட்டும். போய் தனியா கடை போட்டிருக்காங்க. நல்லதுதானே” என்று தனக்கு தானே ஆறுதல் சொல்லிக் கொண்டாலும், இவர் நியமித்த புதியவர்களின் சரக்கு அவ்வளவு திருப்தியாக இல்லையாம். அதனால்தான் இந்த அதிரடி மாற்றம்.

முன்பெல்லாம் வடிவேலுவை அப்ரோச் செய்கிற இயக்குனர்களிடம், “சாரு. என்னை தனியா விட்ருங்க. நானே டிராக் பண்ணி கொடுத்திடுறேன்” என்று கூறிவிடுவார். இல்லை சார்... கதையோட ஒட்டி வரணும் என்றால், “ஸாரி வேற ஆளை பாருங்க” என்று கூறிவிடுவார். (பெரிய நடிகர்களின் படங்களுக்கு மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு) இதனாலேயே பலர் விவேக் பக்கம் ஒட்டி வந்தார்கள். இந்த நிலையில் வைகைப் புயலின் இந்த முடிவு பலருக்கும் சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது.

டிராக் விஷயத்தில் காம்ப்ரமைஸ் ஆனாலும், சம்பள விஷயத்தில் இந்த புயல் சூறாவளியாகிவிட்டார். பத்து விரலையும் நீட்டுகிறாராம். இது ஒருநாள் கணக்குதான் என்கிறார்கள் அதிர்ச்சியோடு!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Archives