பிரபலமான சிலருக்கு வினோத பழக்கங்கள் இருப்பதைக் கேள்விப்பட்டிருக்கின்றோம்.இதோ சில பிரபல வினோதங்கள்.
வினோத பழக்கங்கள்
திரை உலகிற்கு பதிவுலகம் வழங்கும் விருது
பதிவுலக நண்பர்களே உங்கள் அபிமான நட்சத்திரங்களுக்கு வாக்களிக்க மறக்காதீர்கள்
வடிவேலுவுக்கு வெடிவைக்கும் படம்
[ Saturday, 15 August 2009, 02:55.33 PM GMT +05:30 ] ஹீரோ அளவுக்கு வடிவேலுவின் ஓபனிங் சீனுக்கும் பில்டப் கொடுக்கும் அளவுக்கு அவரது காமெடி பிரசித்தம் பெற்றுவிட்டது. 'கச்சேரி ஆரம்பம்' படத்தில் வடிவேலு வரும் ஒவ்வொரு காட்சிகளிலும் வெடி வெடிப்பதுபோல உருவாக்கியுள்ளார்.
இதுபற்றி படத்தின் இயக்குனர் திரைவண்ணன் கூறியதாவது :- "ரொம்பநாள் கழிச்சு ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் பாரி என்ற கதாபாத்திரத்தில் ஜீவா நடிக்கிறார். பெயருக்கு ஏற்ப தன்னிடம் உள்ளதை யார் கேட்டாலும் கொடுத்துவிடுவார். அதை சாதகமாக்கிக் கொள்ள திட்டமிடும் வில்லன் சக்ரவர்த்தி, அவரது காதலி பூனம் பஜ்வாவை கேட்பார். காதலியை ஹீரோ விட்டுத்தருகிறாரா என்பதே கதை. 75 சதவீதம் படம் முடிந்திருக்கிறது. சென்னையில் கோத்தாரி மில்லில் க்ளைமாக்ஸ் காட்சி படமாகிறது. வில்லனுடன் வசனம் பேசியபடியே ஜீவா மோதும் வித்தியாசமான சண்டை காட்சி அமைக்கிறார் அறிமுக ஸ்டண்ட் இயக்குனர் 'பில்லா' ஜெகன். விரைவில் ஜெய்ப்பூரில் பாடல் காட்சி படமாகிறது.
தீபாவளி என்னும் கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்துள்ளார். தீபாவளி அன்று பிறந்ததால் தனது பெயரை தீபாவளி என்று வைத்துக்கொள்கிறார் வடிவேலு. தான் வரும் ஒவ்வொரு காட்சியிலும் பில்டப்பிற்காக வெடி வெடித்த பிறகுதான் வருவார். இதற்காக பண்டல் பண்டலாக பட்டாசு வாங்குகிறோம். தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
வடிவேலுவின் திடீர் மாற்றம்!
[ Friday, 14 August 2009, 05:05.21 PM GMT +05:30 ] டிராக் காமெடிக்கெல்லாம் நோ சொல்லிவிட்டார் வடிவேலு. இனி அவர் நடிக்கும் படங்களில் ஹீரோவுடனும் கதையுடனும் பயணிப்பாராம்.
ஏன் இந்த மாற்றம்? அவருடன் இருந்த குட்டி குட்டி டிராக் நடிகர்கள் எல்லாம், தங்களுக்கென்று தனி டிராக் போட்டுக் கொண்டு போய்விட்டார்கள். இவர்களில் சில பேர் எழுதிக் கொடுத்த டிராக்கைதான் வடிவேலு பயன்படுத்தி வந்தார். இவர்கள் போனதும், தனக்கென்று தனியாக டிராக் காமெடி எழுதுபவர்களை நியமித்திருந்தார் வைகைப்புயல். “அவங்களும் வாழ்க்கையிலே முன்னேறட்டும். போய் தனியா கடை போட்டிருக்காங்க. நல்லதுதானே” என்று தனக்கு தானே ஆறுதல் சொல்லிக் கொண்டாலும், இவர் நியமித்த புதியவர்களின் சரக்கு அவ்வளவு திருப்தியாக இல்லையாம். அதனால்தான் இந்த அதிரடி மாற்றம்.
முன்பெல்லாம் வடிவேலுவை அப்ரோச் செய்கிற இயக்குனர்களிடம், “சாரு. என்னை தனியா விட்ருங்க. நானே டிராக் பண்ணி கொடுத்திடுறேன்” என்று கூறிவிடுவார். இல்லை சார்... கதையோட ஒட்டி வரணும் என்றால், “ஸாரி வேற ஆளை பாருங்க” என்று கூறிவிடுவார். (பெரிய நடிகர்களின் படங்களுக்கு மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு) இதனாலேயே பலர் விவேக் பக்கம் ஒட்டி வந்தார்கள். இந்த நிலையில் வைகைப் புயலின் இந்த முடிவு பலருக்கும் சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது.
டிராக் விஷயத்தில் காம்ப்ரமைஸ் ஆனாலும், சம்பள விஷயத்தில் இந்த புயல் சூறாவளியாகிவிட்டார். பத்து விரலையும் நீட்டுகிறாராம். இது ஒருநாள் கணக்குதான் என்கிறார்கள் அதிர்ச்சியோடு!
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் விட்டமின்-சி!
விட்டமின்-சி அடங்கிய உணவுகளைப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்வதால்,இதயநோய் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம் என்று தெரிய வந்துள்ளது.
சி ரியாக்டிவ் புரோட்டீன்-சிஆர்பி ஏற்படுவதாலேயே இதய நோயும்,சர்க்கரை நோயும் எளிதில் தாக்கக்கூடும் என்றும்,சிஆர்பி பாதிப்பை வைட்டமின்-சி சத்து கட்டுப்படுத்துவதால்,அந்நோய்கள் பாதிப்பில் இருந்து தப்பலாம் என்றும் கலிபோர்னியாவில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
மேலும் வைட்டமின்-ஈ கொண்ட உணவுப் பொருட்களை அன்றாடம் எடுத்துக் கொள்வதால் உடலுக்கு பெரிய அளவில் பலன் ஏதும் இல்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
என்றாலும் விட்டமின்-சி மற்றும் ஈ சத்துள்ள உணவை சாப்பிடுவதால்,மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தைக் கட்டுப்படுத்தும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.
இந்த ஆராய்ச்சியானது 2மாதம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாகவும்,நீண்டகால சோதனையில என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை தெரிவிக்க இயலாது என்றும் ஆய்வு முடிவு அறிக்கை கூறுகிறது.
ரஜினி துவக்கிவைத்த இணையதளம்
[ Thursday, 13 August 2009, 03:36.08 PM GMT +05:30 ] ஃபோர் பிரேம்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை இயக்குநர் ப்ரியதர்ஷனும் அவரது மனைவி லிசி ப்ரியதர்ஷனும் இணைந்து தமது நிர்வாகத்தின் கீழ் நடத்தி வருகின்றனர்.
இதில் காஞ்சிவரம் படத்திற்கு விருது கிடைத்துள்ளது. படத் தயாரிப்பில் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வரும் ஃபோர் பிரேம்ஸ் நிறுவனத்திற்கு ஃபோர் பிரேம்ஸ் என்ற பெயரில் ப்ரிவியூ தியட்டரும் உள்ளது. அது மட்டுமின்றி சினிமா தயாரிப்புக்குத் தேவையான பல்வேறு துறைகளை தன்னுள்ளே கொண்டுள்ள இந்நிறுவனம் இப்போது தனது இணைய தளத்தை துவங்கியுள்ளது.
நமீதாவின் கடின உழைப்பு வெற்றி பெறும் - சரத்குமார்
[ Tuesday, 11 August 2009, 03:17.06 PM GMT +05:30 ] ஜெகன்மோகினி திரைப்படும் அந்தக் காலத்தில் பெரும் வெற்றி பெற ஜெயமாலினியின் கடும் உழைப்பும், அபார நடிப்பும் உதவியாக இருந்தது.
அதேபோல இன்று ரீமேக் செய்யப்பட்டுள்ள ஜெகன்மோகினி படமும் நமீதாவின் கடின உழைப்பால் பெரும் வெற்றி பெறும் என்று பாராட்டியுள்ளார் நடிகர் சரத்குமார். நமீதா, நிலா நடிப்பில் ஜெகன்மோகினி ரீமேக் ஆகியுள்ளது. ஜெயமாலினி கேரக்டரில் நமீதா நடித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று நடந்தது.
தயாரிப்பாளர் சுரேஷ் ஆடியோவை வெளியிட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பெற்றுக் கொண்டார். நடிகர்கள் சரத்குமார், ராஜா, நடிகைகள் நமீதா, நிலா, தயாரிப்பாளர்கள் முரளி, அபிராமி ராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நமீதா பேசுகையில், படத்தின் கதையை இயக்குநர் விஸ்வநாதன் என்னிடம் சொன்னபோது, இது வெற்றி பெறுமா என்பதில் சந்தேகம் இருந்தது. ஆனால் நடிக்க ஆரம்பித்த பின்னர் அந்த சந்தேகம் போய் விட்டது என்றார்.
சரத்குமார் பேசுகையில், ஒரிஜினல் ஜெகன்மோகினி, ஜெயமாலினியின் சிறப்பான நடிப்பால் வெற்றி பெற்றது. அதேபோல, இந்த ஜெகன்மோகினியும், நமீதாவின் கடின உழைப்பால் பெரும் வெற்றி பெறும் என்றார்.
அபிராமி ராமநாதன் பேசுகையில், படத்தின் சில காட்சிகளை பார்த்து நான் பிரமித்துப் போய் விட்டேன். ஹாரி பாட்டர், ஹாலிவுட் படங்களின் தரத்தில் அவை உள்ளன. தமிழ் சினிமாவின் தரத்தை இந்தப் படம் மேலும் உயர்த்தும் என்றார்.
காலை எரித்த நமீதா
[ Wednesday, 12 August 2009, 06:53.11 AM GMT +05:30 ] நமீதா நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ‘ஜெகன்மோகினி’. இந்தப் படம் விட்டாலாச்சாரியாவின் படமான ‘ஜகன்மோகினி’யைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் நமீதா, நிலா, வடிவேலு போன்றோரும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் நமீதா தன்னுடைய காலை அடுப்பில் வைத்து எரிப்பது போன்ற ஒரு காட்சி இடம் பெற்றுள்ளதாம். இதை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உதவியுடன் கலக்கலாக கொண்டுவந்திருக்கிறார்களாம்.
விஜய் 50... ராஜ்குமார் இயக்குகிறார்!
ஆர்கே நடிக்கும் அழகர் மலை படத்தை இப்போது முடித்துக் கொடுத்துவிட்ட ராஜ்குமார், சொன்ன கதை தயாரிப்பாளர் சங்கிலி முருகனுக்குப் பிடித்துவிட, அவர்தான் விஜய்க்கு ரெகமண்ட் செய்தாராம்.
இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இளையராஜாவிடம் இசையமைத்துத் தர கேட்டுள்ளாராம் சங்கிலிமுருகன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதனால் யுவன் ஷங்கராவது இசையமைக்க வேண்டும் என சங்கிலி முருகன் கோரிக்கை விடுத்துள்ளாராம்.
அறிமுகம் 256 ஜி.பி பென் டிரைவ்
கிங்க்ஸ்டன் நிறுவனம் 256 ஜி.பி பென் டிரைவை அறிமுகம் செய்துள்ளது.இதில் நீங்கள் கடவுசொல்லினைக்(password) கொண்டு உங்கள் கோப்புகளை(files) பாதுகாத்தும் கொள்ளலாம்.நீங்கள் கோப்புகளை பரிமாறிகொள்ளும் நேரமும்(Data Transfer Time) இதில் மிகக் குறைவே.இதற்கு 5 வருட வாரன்டியும் உண்டு.இது இந்தியாவுக்கு இன்னும் வரவில்லை.அதனால் இதன் விலை என்னவென்று பொறுத்திருந்து பார்க்கலாம்.மற்ற நாடுகளில் இதன் விலை $ 1100.

Technical Specifications
Capacity — 256GB
Fast — data transfer rates of up to 20MB/sec. read and 10 MB/sec. write
Dimensions — 2.78″ x 0.88″ x 0.65″ (70.68mm x 22.37 mm x 16.45mm)
எயிட்ஸ் வைரஸின் பரம்பரை ரகசியங்கள் வெளிப்பட்டன.
உலகில் மனித குலத்தை ஆட்டிப்படைத்து வரும் எயிட்ஸ் நோய்க்குரிய எச் ஐ வி -1 (HIV -1)(Human immunodeficiency virus) இன் பரம்பரை அலகுகளின் தொகுப்பு (genome) அமெரிக்க வடக்கு கரோலினா பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டு வெளிக் கொணரப்பட்டுள்ளது.
இதன் மூலம் விளங்கக் கடுமையாக உள்ள எச் ஐ வியின் செயற்பாடுகள், மாறல்கள் மற்றும் அதன் பெருக்கங்கள் தொடர்பான பரம்பரை அலகுகள் சம்பந்தப்பட்ட விடயங்கள் தெளிவாக விளங்கிக் கொள்ளப்பட்ட முடியும் என்றும் அதன் மூலம் எச் ஐ வியைக் கட்டுப்படுத்தும் மருந்துகளின் தயாரிப்பை மேலும் வினைத்திறனுடைய வகையில் வலுப்படுத்த முடியும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
எளிமையான மற்றைய வைரஸ்களின் ஜினோம்களோடு ஒப்பிடும் போது எச் ஐ வி- 1 சிக்கலான ஜினோம் தொகுப்பைக் கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்து கூறியுள்ளனர்.
எச் ஐ வி - 1 டி என் ஏ (DNA) இரட்டைச் சங்கிலி அமைப்பில் பரம்பரைத் தகவல்களைச் சேர்த்து வைக்கும் வைரஸ் அல்ல. அது ஆர் என் ஏ (RNA) எனப்படும் ஒற்றைச் சங்கிலி அமைப்பில் தகவல்களை சேகரித்து வைப்பதால் அதன் பரம்பரை அலகுகளின் தொடர்ச்சியை ஆராய்ந்து வெளிப்படுத்துவது என்பது சிக்கலானதாக இருந்து வந்தமை இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
மலை மலை [ Friday, 07 August 2009, 04:48.21 PM GMT +05:30 ] சரியான ‘ரூட்டை’ பிடிச்சிட்டேன்னு சொல்லாம சொல்ல நினைத்தாரோ என்னவோ? அருண் விஜய்க்கு இந்த படத்தில் வேன் டிரைவர் வேஷம்.
பஸ் ஸ்டாண்டில் என்ட்ரியாகி, பறக்க பறக்க அடிக்கிற மசாலா மன்மதனாகியிருக்கிறார். பழனியில் துவங்குகிற கதை, சென்னையில் முடிவதற்குள் ஒரு இரத்த வங்கியே தேவைப்படுகிற அளவுக்கு பிளட் லாஸ். ஆனால் டைரக்டர் அருணுக்காக கொடுத்திருக்கும் பில்டப் இருக்கே, பாஸ்! பாஸ்!
பழனிக்கு விருந்தாளியாக வரும் வேதிகா, சென்னைக்கு திரும்பும்போது அருணின் மனசையும் கையோடு கொண்டு போக, பின்னாலேயே விரட்டுகிறது காதல். அவரை தேடி சென்னைக்கு வருகிறார் அருண். இங்கே, வழியோட போற வில்லன் பிரகாஷ் ராஜூக்கும் அருண் விஜய்க்கும் நடுவில் பற்றிக் கொள்கிறது கனல். புத்தூர் கட்டு போட்டாலும், போல்ட் போட்டு முடுக்கினாலும் கூட, சேரவே முடியாதளவுக்கு எலும்புகளை நொறுக்கி எதிரிகளை பந்தாடுகிறார் அருண். ட்விஸ்ட் என்னவென்றால் இந்த பிரகாஷ்ராஜும், அருணின் ஆசை அண்ணன் பிரபுவும் பால்ய கால நண்பர்கள். வில்லனுக்கும் ஹீரோவுக்கும் ஒரு சவால் வேண்டுமே? எண்ணி ஏழே நாளில் என் காதலி கழுத்திலே தாலியை கட்டுறேன். முடிஞ்சா தடுத்துக்கோ என்று அருணும், பார்க்கிறேண்டா என்று பிரகாஷ்ராஜும் மணிக்கட்டை முறுக்க, கடைசி ரீலில் தீ பற்றாத குறையாக முடிகிறது படம்.நிறைய உழைத்திருக்கிறார் அருண் விஜய். முந்தைய படங்களை ஒப்பிட்டால், நடிப்பின் ஹைட் ‘மலை’யை தொட முயல்கிறது. கல்யாணமே வேண்டாம் என்றிருக்கும் பிடிவாத அண்ணனுக்கு கஸ்தூரியை கட்டி வைக்க துடிக்கும் இவரது பாசம், ‘தம்பியுடையான் கல்யாணத்துக்கு அஞ்சான்’ என்று கைதட்ட வைக்கிறது. வேதிகாவுக்கும் இவருக்குமான காதல், ரொமான்ஸ் ரோஸ்ட்!
வேதிகா தனக்கேற்ற கதையை பிடிப்பது இருக்கட்டும். தனக்காக கொஞ்சம் சதையை பிடிக்க வைத்தால் நல்லது. பாடல் காட்சிகளில் அற்புத நெளிவு. ஆனந்த ஆட்டம். அது போதுமா ஹீரோயினுக்கு?
கொடுவாள் மீசையோடு என்ட்ரி ஆகும் பிரபு, தம்பிக்காக செய்யும் தப்பு தண்டாக்கள் ஜாலி. சென்னைக்கு வந்து பிரகாஷ்ராஜுடன் மல்லு கட்டுவார் என்று எதிர்பார்த்தால், டேய்... பிரண்டு என்று தோளில் கை போட்டுக் கொள்கிற காட்சி, கதையோட்டத்தில் வரும் ஹேர் பின் பெண்டு! தனது காதலி இறந்தது தெரியக் கூடாது என்றே போனில் கல்யாணம் செய்து வைக்கிறாரே, கண்ணீருக்கு நடுவில் கைதட்டல்!
பிரகாஷ்ராஜ் வழக்கம் போல சூப்பர். கண்களில் சிரித்து, அதே கண்களில் குரூரம் காட்டி, அப்படியே அழவும் செய்கிற அந்த ஜாலம், அவருக்கே வாய்த்த மாயாஜாலம்!முன்னாள் கதாநாயகி கஸ்தூரி இந்த படத்தில் இரண்டாவது நாயகி. (டைரக்டருக்கு பாறாங்கல்லு மனசுய்யா) புரஃபைல் காட்சிகளில் முடிகயிறு(?) போடுகிற அளவுக்கு மிரட்டியிருக்கிறார்.
சந்தானம், ஆர்த்தி காதலுக்கு தியேட்டரே திண்டாடிப் போகிறது. அதுவும் ‘கல்லை மட்டும் கண்டால்’ அறிமுகத்தோடு வந்திறங்கும் சந்தானம், கவுண்டரை மிஞ்சிய சிரிப்பு என்‘கவுண்டர்!’ கஞ்சா கருப்புவிடம் பிரைட்னஸ் கம்மியா இருக்கு. கவனிங்க சாரு.
மணிசர்மாவின் குத்து ஒவ்வொன்றும் விருந்துக்கேற்ற பீடா.
மலை மலை- மலைப்பு!
அடுத்த அதிரடி என்ன? வடிவேலு அறிவிப்பு [ Monday, 03 August 2009, 05:17.48 AM GMT +05:30 ] எல்லாரும் நமக்கே ஆப்பு வச்சிட்டாய்ங்க"ன்னு பதில் சொல்வார் என்றுதானே எதிர்பார்ப்போம். நம்மை அப்படி நினைக்க வைக்கிற மாதிரியேதான் அமைந்தது வடிவேலுவுடன் இருந்தவர்கள் செய்த சில வேண்டாத காரியங்கள். ஆனால், ரொம்ப பக்குவமாகவே பதில் சொல்கிறார் வடிவேலு.
அவங்களும் வெளிச்சத்துக்கு வரணுமில்லையா? தெரிஞ்ச முகமாயிட்டாங்க. வேற வேற படங்களில் நடிக்க வாய்ப்பு வருது. போய் பண்ணுறாங்க. அவங்கள்ளாம் எனக்கு அறிமுகம் ஆகும்போது புதுசாதான் அறிமுகம் ஆனாங்க. அதே போல் இப்போ நிறைய புதுமுகங்களை நான் கொண்டு வர்றேன். புதிய காமெடிகளும் வந்துகிட்டேயிருக்கு. வேற வேற மாதிரி வெரைட்டியா நடிச்சதானே ஜனங்களை தொடர்ந்து சிரிக்க வைக்க முடியும். அழகர் மலையிலே என்னோட புது கூட்டணி போட்டிருக்கிற ஆட்டத்தை பாருங்க. என்னோட அடுத்த அதிரடி இந்த படம்தான்.
எல்லாம் அவன் செயல் படத்திலே நானும் ஆர்.கே வும் போட்ட காமெடிய பார்த்திட்டு இன்னும் வயிறு வலிக்க சிரிச்சிட்டு இருக்காங்க. இப்போ அழகர் மலை படத்திலே மறுபடியும் ஒரு புயலை கிளப்பியிருக்கோம் பாருங்க என்ற வடிவேலு சொன்ன இன்னொரு தகவல், ரொம்ப நெகிழ்ச்சிக்குரியது.
சேலத்தை சேர்ந்த ஒரு குழந்தை விபத்தில் சிக்கி கோமா ஸ்டேஜில் இருந்ததாம். டிவியிலே என்னோட காமெடி சீன்களை போட்டு கோமாவில் இருந்து எழுப்பியிருக்காங்க. இதை கேட்கும் போதே மனசுக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்திச்சு என்றார்.
வாங்கய்யா, வைத்தியாரய்யா... !

விஸ்டன் கிரிக்கெட்டர் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "நான் இது வரை சாதித்தது திருப்தி அளிக்கவில்லை, நான் 15,000 ரன்களை எடுப்பது அவசியம் என்று சுனில் கவாஸ்கர் என்னிடம் கூறியுள்ளார், அவ்வாறு நான் செய்யவில்லை எனில் என் மீது அவர் கோபம் கொள்வார் என்று அவர் ஏற்கனவே ஒரு முறை கூறியிருக்கிறார்" என்று கூறியுள்ளார் சச்சின்.
தனது மற்றொரு மிகப்பெரிய லட்சியம் 2011 உலகக் கோப்பை சாம்பியனாக இந்திய கிரிக்கெட் அணி விளங்கவேண்டும் என்பதே என்று கூறியுள்ளார் சச்சின்.
மேலும் தான் எப்போதும் ஏதாவது ஒரு வலியுடந்தான் கிரிக்கெட் விளையாடி வருகிறேன் என்று கூறிய டெண்டுல்கர் கடைசி 3 மாதங்களாக கைவிரல் காய வலியுடன் விளையாடி வருவதாக கூறினார். 25 வயதில் என்ன செய்தேனோ அதனை இன்றும் செய்ய முடியும், ஆனால் உடல் மாறிக் கொண்டிருக்கிறது, அதனால் சிந்தனையையும் மாற்றவேண்டியுள்ளது. நான் எப்படி யோசிக்கிறென் என்பதையே தற்போது மாற்ற வேண்டியுள்ளது. அதாவது 'ரிஸ்க்' குறைவாக எடுக்கவேண்டும்.
ஆஸ்Tரேலிய முன்னாள் பயிற்சியாளர் ஜான் புக்கானன், சச்சின் டெண்டுல்கர் இன்னிங்ஸ் துவக்கத்தில் ஷாட் பிட்ச் பந்துகளுக்கு வீழ்ந்து விடக்கூடியவர் என்று கூறியுள்ளது குறித்து சச்சினிடம் கேட்டதற்கு "அது அவரது கருத்து, ஜான் புக்கானன் எப்போதும் எல்லாவற்றையும் சரியாக கூறவேண்டும் என்ற அவசியமில்லை. ஷாட் பிட்ச் பந்துகளை சரியாக எதிர்கொள்ளவில்லை எனில் நான் எவ்வாறு இன்னமும் ரன்களை என்னால் குவித்துக் கொண்டிருக்க முடியாது.
அவர் தனது கருத்தை மாற்றிக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன், உலகத்தில் உள்ள அனைத்து பந்து வீச்சாளர்களிடம் ஏதோ ஒரு தவறு உள்ளது, இதனால்தான் என்னை இவ்வளவு ரன்களை அடிக்க விட்டுள்ளனர்".
டான் பிராட்மேன், ஒரு முறை சச்சினின் ஆட்டம் தன் ஆட்டம் போல் இருப்பதாகக் கூறிய புகழ் பெற்ற அறிக்கைக்குப் பின்னர், சச்சின் தற்போது விரேந்திர சேவாக் கிட்டத்தட்ட தன் பாணியில் ஆடி வருவதாக தெரிவித்தார் சச்சின்.
அதே போல் ஓய்வு பெறுவது குறித்து பேசியுள்ள சச்சின், தன்னை வெளியே இழுக்கவேண்டிய அவசியமில்லை. எப்போது எனக்க்கு சரியான நேரம் என்று தோன்றுகிறதோ அப்போது ஓய்வு பெறுவேன் என்று கூறியுள்ள சச்சின் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகான ஒரு வாழ்க்கையை நினைத்தாலே தனக்கு அச்சமூட்டுவதாக உள்ளது என்றும், தனது வாழ்க்கை முழுதும் கிரிக்கெட்டுடனேயே இருந்து வந்துள்ளதால் ஓய்வு பெற்ற் பிறகும் இன்னொரு 10 பந்துகள் விளையாடவேண்டும் என்ற ஆவல் தீரவே தீராது என்றும் கூறியுள்ளார் சச்சின்
ரோபோ தொழில்நுட்பத்தில் இருதய அறுவை சிகிச்சை ரோபோ உதவியுடன் இரண்டு பேருக்கு இருதய அறுவை சிகிச்சையை சென்னை மருத்துவர்கள் வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். இருதய அறுவை சிகிச்சையில் இது ஒரு முக்கியமான திருப்பம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரோபோ உதவியுடன் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையினால் நோயாளிகளுக்கு சில வசதிகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இம்முறையை பயன்படுத்துவதால் நோயாளிக்கு வலி குறையும் என்றும், அறுவை சிகிச்சையின் போது விரையமாகும் இரத்தத்தின் அளவும் கட்டுபபடுத்தப்படுவதால் இது நோயாளிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
இந்த அறுவை சிகிச்சை முறையில் சென்னையில் உள்ள செட்டிநாடு ஹெல்த் சிட்டி மருத்துவமனை மருத்துவர்கள் இரண்டு இளைஞர்களுக்கு இருதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். இந்த அறுவை சிகிச்சையின் போது குறைந்த அளவு திசுக்களே சேதமடைவதால் குறைந்த அளவே இரத்த விரையம் ஏற்படுகிறது. இதனால் நோயாளிக்கு குறைந்த அளவே இரத்தம் செலுத்தினால் போதுமானது.
இந்த சிகிச்சை முறையினால் குறைந்த அளவு பகுதிகள்தான் பாதிக்கப்படுகின்றன. அதனால் அறுவை சிகிச்சையின் போது போடப்படும் தையல் உறுதியாகவும் இருக்கும் என்று இம் மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்
எந்திரனுக்கு பிறகு ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம்: சத்யநாராய ராவ் [ Tuesday, 04 August 2009, 04:02.56 AM GMT +05:30 ] ''ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து 'எந்திரன்' படத்துக்குப் பிறகு முடிவெடுக்கப்படும்'' என அவரது சகோதரர் சத்யநாராயண ராவ் கூறினார்.
திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூரில் உள்ள பாப்பாத்தியம்மன் கோயிலில் நடைபெற்ற ஆடிப் பெருக்கு விழாவில் அன்னதானம் வழங்க வந்த அவர் கூறுகையில், எங்கேயோ பிறந்து, தமிழகம் வந்து அனைவரின் மனதிலும் ரஜினி நீங்காத இடம் பிடித்துவிட்டார்.
மக்கள் விரும்பினால் அவர் அரசியலுக்கு வருவார். இது குறித்து 'எந்திரன்' படம் வெளிவந்த பிறகு விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும்.
தற்போது கிருஷ்ணகிரி அருகே நாச்சியார்குப்பத்தில் எங்கள் தாய், தந்தை நினைவாக திருமண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. 'எந்திரன்' படம் வெளிவந்த பிறகு மணி மண்டபம் கட்ட இருக்கிறோம் என்று சத்யநாராயணராவ் கூறினார்.
சிவகாசி வழக்கு... விஜய் வருத்தம்! [ Thursday, 06 August 2009, 11:28.30 AM GMT +05:30 ] பொதுவா முன்னணி ஹீரோக்கள் நடிச்சு வர்ற படங்களில் குறை கண்டுபிடித்தே பேரு வாங்குற புலவர்கள் அதிகம். கேஸ் போடுவாங்க. போராட்டம் நடத்துவாங்க. திரை மறைவில் என்ன நடக்குமோ? கொஞ்ச நாட்களில் எல்லாம் மறந்து போகும். ஆனால் சிவகாசி படத்திலே வக்கீல்களை இழிவு படுத்துற மாதிரி சில காட்சிகள் அமைந்ததும், அதற்கு எதிராக சிலர் கோர்ட்டுக்கு போனதும் அவ்வளவு ஈசியா முடிந்துவிடுகிற சமாச்சாரமாக இல்லை.
இந்த வழக்கின் விசாரணையில் விஜய்க்காக ஆஜரான வக்கீலை செம பிடி பிடித்தார் நீதிபதி. சினிமா என்ற பெயரில் யாரை வேண்டுமானலும், எப்படி வேண்டுமானாலும் சித்தரிக்கலாமா என்று கேட்டார் நீதிபதி. இதையெல்லாம் எதிர்பார்க்காத விஜய், சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே பெட்டர் என்று நினைத்தார் போலிருக்கிறது. நீதிமன்றத்திடம் மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்.
விஜய் சார்பாக நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்து ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதில், நான் வழக்கறிஞர்களுக்கு எதிரானவன் அல்ல. சிவகாசி படத்தில் வழக்கறிஞர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைந்திருந்தால், அது வழக்கறிஞர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் அமைந்திருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜய்.முன்செல்ல
வைரஸ்களைக் கண்டறிய ஒரு கையடக்கக்கருவி ஒருவர் வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்பதை சில நிமிடங்களில் கண்டுபிடிக்கக்கூடிய ஒரு கருவியை ட்வெண்டி பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த ஆஸ்டெண்டம் என்னும் நிறுவனம் உருவாக்கியுள்ளது. மாதிரிக்கருவி மட்டுமே இப்போது உருவாக்கப்பட்டுள்ளது. வணிகரீதியிலான கருவி 2010 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரும். இந்தக்கருவி அதிவேகத்தில் இயங்கி வைரஸ்களைக்கண்டுபிடிப்பது மட்டுமின்றி எங்கும் எளிதில் எடுத்துச்செல்லக்கூடியதாக இருப்பது ஒரு கூடுதல் சிறப்பு.
Virus Detector ஒவ்வொரு நுண் உயிரியுடனும் வினைபுரியக்கூடிய ஓர் எதிர் உயிரி உண்டு. இந்த எதிர் உயிரியை நாம் ஏற்பி (receptor) என்கிறோம். கருவியில் உள்ள நுண்குழாய்களில் இந்த ஏற்பி உட்பூச்சாக பூசப்பட்டிருக்கும். இப்போது பீதியைக்கிளப்பி வரும் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு எதிர் உயிரி கண்டுபிடிக்கப்பட்டவுடன் ஒரு சில நிமிடங்களில் வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதை இந்தக்கருவியைக்கொண்டு தெரிந்து கொள்ளலாம். பயங்கரமான வைரஸ்நோய்கள் வேகமாகப்பரவுவதை தடுப்பதற்காக இதுபோன்ற விரைவான சோதனைக்கருவிகள் அவசியம் இல்லையா?
வைரஸ்கள் இருப்பதைக்கண்டுபிடிப்பது மட்டுமின்றி, பாக்டீரியா, புரதங்கள் மற்றும் டி என் ஏ மூலக்கூறுகள் இவற்றையும் இந்தக் கருவியைக்கொண்டு கண்டுபிடிக்க இயலும். இக்கருவியை பயன்படுத்துவோருக்கு சிறப்புப்பயிற்சிகள் ஏதும் தேவையில்லை என்பது கூடுதல் சிறப்பு.
இந்தக்கருவியில் இரண்டு பகுதிகள் உள்ளன. முதற்பகுதி ஒரு சின்னஞ்சிறிய ஆய்வகத்தை உள்ளடக்கிய ஒளிஉணரும் ‘சில்லு’ (chip) ஆகும். இரண்டாவது பகுதி எளிதில் எடுத்துச்செல்லக்கூடிய ஒரு (portable detector) ஏற்பியாகும். ‘சில்’லில் உள்ள பல்வேறு துளைகள் வழியாக சோதனைக்கு உட்படுத்தப்படுபவரின் இரத்தம் அல்லது எச்சில் மாதிரி உள்ளே செலுத்தப்படுகிறது. இந்த துளைகளின் உட்புறம் நுண் உயிரிகளுடன் வினைபுரியும் ஏற்பிகள் உட்பூச்சாக பூசப்பட்டுள்ளன. குறிப்பிட்ட அதிர்வெண்கொண்ட லேசர் ஒளிக்கற்றையும் இந்த நுண் உயிரிகளுடன் அனுப்பப்படுகிறது. ஏற்பிகளாகிய எதிர் உயிரிகளுடன் வைரஸ்கள் வினைபுரியும்போது லேசர் ஒளிக்கற்றையின் அதிர்வெண் மாறுபடுகிறது. இக்கருவியில் பெறப்படும் அளவீடுகள் மிகநுண்ணியதாக இருப்பதால் குறிப்பிட்ட வைரஸை இனங்காணுவது மிக எளிதான காரியம். மேலும் ஒவ்வொரு வைரஸிற்கும் வெவ்வேறு அளவில் இந்த அதிர்வெண் மாற்றம் இருக்கும்.
அறிமுகம்
பதிவுலக நண்பர்களே எனது இந்த புதிய முயற்ச்சிக்கு ஆதரவு வழங்கி எனது தமிழருவியை தொடர்ந்து நடாத்திச்செல்ல உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன் .
Archives
-
▼
2009
(19)
-
▼
ஆகஸ்ட்
(19)
- வினோத பழக்கங்கள்
- திரை உலகிற்கு பதிவுலகம் வழங்கும் விருது
- வடிவேலுவுக்கு வெடிவைக்கும் படம்
- வடிவேலுவின் திடீர் மாற்றம்!
- சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் விட்டமின்-சி!
- ரஜினி துவக்கிவைத்த இணையதளம்
- நமீதாவின் கடின உழைப்பு வெற்றி பெறும் - சரத்குமார்
- காலை எரித்த நமீதா
- விஜய் 50... ராஜ்குமார் இயக்குகிறார்!
- அறிமுகம் 256 ஜி.பி பென் டிரைவ்
- எயிட்ஸ் வைரஸின் பரம்பரை ரகசியங்கள் வெளிப்பட்டன.
- மலை மலை[ Friday, 07 August 2009, 04:48.21 PM GMT +...
- அடுத்த அதிரடி என்ன? வடிவேலு அறிவிப்பு[ Monday, 03 ...
- 15,000 ரன்கள் ,2011 உலகக்கிண்ண வெற்றி சச்சின் டெண்...
- ரோபோ தொழில்நுட்பத்தில் இருதய அறுவை சிகிச்சைரோபோ உத...
- எந்திரனுக்கு பிறகு ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம்:...
- சிவகாசி வழக்கு... விஜய் வருத்தம்
